பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்கு இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் | Kalvimalar - News

பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர்வதற்கு இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்மே 23,2012,13:03 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை, இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கு அண்ணா பல்கலை வெளியிட்ட விண்ணப்பப் படிவங்கள் தீர்ந்துவிட்டதால், விண்ணப்ப வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பற்றி, "தினமலர்" நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.

இதுதொடர்பாக, பொறியியல் சேர்க்கைத் துறை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்ட அறிக்கை: கடந்த 1997ம் ஆண்டு முதல், தமிழக அரசுக்காக, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை மேற்கொண்டு வருகிறது. விண்ணப்ப படிவ வினியோகம் பற்றி, முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது.

அதில், "தமிழகம் முழுவதும் உள்ள, 59 மையங்களில் இருந்து நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்; தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்; அண்ணா பல்கலை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்" என, மூன்று விதமான வாய்ப்புகளும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளும் வசதி, பல ஆண்டுகளாகவே அமலில் உள்ளது. இருந்தாலும், அச்சடித்த விண்ணப்பங்களை பெறுவதில்தான், பெரும்பான்மையானோர் ஆர்வம் காட்டுகின்றனர். வரும் 31ம் தேதி வரை, அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, அதில் பதிவேற்ற முடியும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

Hi, its very good job, keep it up and very very thanks.
by Dina,India    5/23/2012 9:47:55 PM IST
தினமலர் நிருபர் நேற்று அவசர கோலத்தில் வெளியிட்ட செய்திக்கு நேற்று எனது கருத்தை தெரிவித்திருந்தேன். அதைத்தான் இருட்டடிப்பு செய்து விட்டீரே. தினமலருக்கு மு.க மற்றும் சோனியா புகழ் பாடும் கருத்துக்கும் ஊழலுக்கும் வக்காலத்து வாங்கும் கருத்துக்களுக்கும் மட்டுமே இடம்போலும்.
by A N Karishnamoorthi,India    5/23/2012 4:35:56 PM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us