ஆசிரியர் தகுதித் தேர்வை அணுகுவது எப்படி? | Kalvimalar - News

ஆசிரியர் தகுதித் தேர்வை அணுகுவது எப்படி?மே 18,2012,17:42 IST

எழுத்தின் அளவு :

தமிழக அரசு நடத்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என்ற நிலையில், இத்தேர்வை எழுத 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வை எளிதாக அணுக உதவும் வகையில் சில ஆலோசனைகள் இங்கே:
இத்தேர்வை எழுதும் முன், தேர்வுக்கான கேள்வித்தாள் எவ்வாறு இருக்கும்?  150 கேள்விகளுக்கு வெறும் 90 நிமிடங்களில் பதிலளிக்க முடியுமா? Multiple choice கேள்விகள் தேர்வுகளுக்காக பயிற்சி எடுக்க வேண்டுமா?

மாதிரி பேப்பர்களைக் கொண்டு வீட்டில் பயிற்சி செய்தால், நிஜ தேர்வுக்கான சரியான பயிற்சியை பெற முடியுமா? பலவீனமாக இருக்கக்கூடிய அல்லது நன்றாக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை எவ்வாறு அடையாளம் காண்பது? என்னுடைய புலமையை அளவிடுவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டியுள்ளது.

தேர்வு எழுதுவதற்கான தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நீங்கள் எளிதாகப் பெற வேண்டுமெனில், அதற்கு மாதிரி தேர்வே (model or mock test) ஒரு சிறந்த வழி. இதுபோன்ற தேர்வுகளை எழுத, பிரிண்ட் செய்யப்பட்ட படிவங்கள் answer key -யுடன் கிடைக்கின்றன. இதுபோன்ற மாதிரி தேர்வுகளை எழுதும்போது, உண்மையான தேர்வு சூழல் போன்ற ஒன்றை உருவாக்கி எழுதிப் பார்க்க வேண்டும்.

மேலும், நிபுணர்களால் வழங்கப்படும் மாதிரித் தேர்வுகளை நீங்கள் எழுதிப் பார்ப்பது நல்ல பலனைத் தரும். ஏனெனில், அந்த நிபுணர்களுக்கு, உங்களின் தேர்வை பகுப்பாய்வு செய்த அனுபவம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நீங்கள் பெற்ற மதிப்பெண் பற்றிய தங்களின் மதிப்பீட்டை அவர்கள் வழங்குவதோடு, நீங்கள் எதில் பலவீனமாக இருக்கிறீர்கள் மற்றும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் எவை போன்றவை பற்றிய ஆலோசனைகளையும் அவர்கள் தருகிறார்கள்.

நீங்கள் மாதிரி தேர்வை எப்போது எழுதலாம் என்ற கேள்வி எழலாம்? உங்களின் அடிப்படை தயார்செய்தலை முடித்தப் பின்னரே, மாதிரி தேர்வை எழுத வேண்டும். மேலும், நிஜ தேர்வுக்கு, குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னர் மாதிரித் தேர்வை எழுதுதல் சிறந்தது. இதன்மூலம் உங்களின் நிலைப் பற்றிய சிறந்த மதிப்பீட்டை நீங்கள் பெறுவீர்கள்.

இத்தேர்வின் முடிவில், உங்களின் முன்னேற்றம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து, அதன்மூலம் நிஜ தேர்வுக்கு உங்களை சிறப்பாக தயார்செய்து கொள்ளலாம்.

மாதிரித் தேர்வுகள் என்பவை, உங்களின் பலவீனங்களை அறிந்து, அதன்மூலம் உங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பெரிதும் பயன்படுபவை. நீங்கள் செய்த பிழைகளுக்கான காரணத்தை நீங்கள் கண்டுபிடித்து, அதை களையலாம். இத்தகைய தேர்வுகளின் மூலமாக, நீங்கள் அடிக்கடி மற்றும் ஒரே ஒருமுறை மட்டுமே செய்த தவறுகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.

தயாராதலை அப்போதுதான் முடித்திருக்கும் ஆசிரியர்கள், முழு அளவிலான மாதிரி தேர்வுகளை எழுதுதல் நலம். இதன்மூலம், நிஜ தேர்வு நாளில் எவ்வாறு எழுதலாம் என்ற ஐடியா கிடைக்கும். தினமலர், கல்விமலர் மற்றும் எவரான் இணைந்து, TN-TET மாதிரித் தேர்வை நடத்துகிறது. இந்த மாதிரித் தேர்வை எழுத www.kalvimalar.com/tntet என்ற இணையதளத்தில், இல்லத்திலிருந்தோ அல்லது இண்டர்நெட் மையம் சென்றோ, இலவசமாகப் பதிவுசெய்து TN-TET மாதிரித் தேர்வை எழுதலாம்.

தேர்வை முடித்தப் பின்பாக, தேர்வு முடிவுகள் மற்றும் தாங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அம்சங்கள் பற்றி  SMS/eMAIL மூலமாக தெரிவிக்கப்படும். மே 18 முதல் மே 20 வரை இத்தேர்வை ஆன்லைனில் இலவசமாக எழுதலாம். தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட 12 எவரான் மையங்களில் இத்தேர்வை நேரிலும் எழுதலாம்.

வாழ்த்துக்கள்!


வாசகர் கருத்து

சூப்பர் சார்
by harish,Taiwan    31-மார்-2014 23:58:03 IST
மிகவும் நன்றி இந்த முறை நன்றாக உள்ளது.
by kannan,India    24-மார்-2014 22:24:41 IST
Please mail TNTET Paper 1 English Question & answer
by ஜ. ராஜேஸ்வரி,India    02-ஆக-2013 19:45:05 IST
சைகலாஜி, கணக்கு இரெண்டு படங்களையும் எப்படி எளிதாக படிப்பது என்பது பற்றி எனது ஈமெயில் லுக்கு செண்ட் பண்ணுங்க ப்ளீஸ் சார்
by பென்ஹர் immanuel,India    12-ஏப்-2013 14:33:58 IST
I want TET model question papers .
by பூங்குழலி.M,India    26-மார்-2013 11:18:31 IST
சைகலாஜி , கணக்கு இரெண்டு படங்களையும் எப்படி எளிதாக படிப்பது என்பது பற்றி எனது ஈமெயில் லுக்கு செண்ட் பண்ணுங்க ப்ளீஸ் சார்
by சந்திரசேகர்,India    29-டிச-2012 19:04:58 IST
its very nice method i write exam
by rajalakshmi,India    25-நவ-2012 14:51:47 IST
i want model question paper 2, how can I attend this exam? pls s my email id.
by suresh,India    21-ஜூன்-2012 09:01:53 IST
I want the TET pepar 2 model question with answers of thinamalar in my email.
by suresh,India    14-ஜூன்-2012 08:14:57 IST
I like this method. very useful.
by Ram kumar.K,India    19-மே-2012 21:41:26 IST
I like this method. very useful.
by Naga lakshmi.R,India    19-மே-2012 21:31:30 IST
மிக்க நன்றி
by முருகன்.ம,India    19-மே-2012 20:45:57 IST
i am a teacher, i think it will be useful for me, thankyou thinamalar and kalvimalar
by umamageshwari.n,India    19-மே-2012 19:28:10 IST
I want tntet model question paper . I have ready for model exam Where do find the question paper ?
by N .REVATHI,India    19-மே-2012 17:45:35 IST
I want free kalvimalar online exam
by கே.krishnakumari,India    19-மே-2012 13:23:05 IST
I want everyday the TET model exam in online
by S. mangaiyarkarasi,India    19-மே-2012 13:19:46 IST
This is very useful to me. I want TNTET model question papers, How can I prepare the exam,kindly give me TET exam tips.
by Naga lakshmi.R,India    18-மே-2012 22:05:57 IST
பெஸ்ட் தேங்க்ஸ்
by சுகந்தி.G,India    18-மே-2012 19:16:29 IST
i want model question paper, how can I attend this exam?
by Naga lakshmi.R,India    18-மே-2012 18:39:25 IST
நல்ல வழிகாட்டி
by thara,India    18-மே-2012 17:59:19 IST
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும் மற்றும் எப்பொழுது கிடைக்கும் அதற்கான வழிமுறைகள் என்ன? ஆசிரியர் தேர்வுக்கான குறைஞ்சபட்ச தகுதி என்ன? இவை அனைத்தையும் என்னுடைய மின்னஞ்சல் முலம் தெரிவிக்கவும் .... இப்படிக்கு உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பாக்கும் raman
by ராமன்,India    18-மே-2012 17:51:23 IST
thanks to this method
by ஸ்ரீநாத்.G,India    18-மே-2012 16:00:14 IST
very useful
by M.Karpagavalli,India    18-மே-2012 15:50:09 IST
I want online exam paper, thank u.
by selvam,India    18-மே-2012 14:58:24 IST
Where will you find Model Papers?
by Mrs.S.Jayashree,India    18-மே-2012 13:25:16 IST
தகுதி தேர்வின் date மாறி உள்ளதா ?
by ஆர் ஆர் கிருஷ்ணன் ,India    18-மே-2012 12:50:49 IST
TET is gonna be postponed..?
by swetha,India    18-மே-2012 12:49:09 IST
thanks to dinamalar
by vidhya,India    18-மே-2012 12:37:01 IST
it is really wonderful method
by raj,India    18-மே-2012 12:04:58 IST
தேங்க்ஸ்
by நித்ய பிரியா.k,India    18-மே-2012 11:11:57 IST
I want online TET exam paper
by ர.POTHIRAJA,India    18-மே-2012 11:10:26 IST
தேங்க்ஸ் டு kalvimalar
by நித்ய பிரியா.k,India    18-மே-2012 11:10:16 IST
this method is best way
by c.saravanakumar,India    18-மே-2012 10:30:56 IST
thank u
by jebastar,India    18-மே-2012 10:09:57 IST
இட் இஸ் ரியலி வெரி குட் ஐடியா. I am not attending any coaching centre. so this is very useful for me
by P சத்யா,India    18-மே-2012 09:52:16 IST
thanks to dinamalar
by P.Jebastar,India    18-மே-2012 09:11:05 IST
இது ஒரு நல்ல கருத்து. இதை தேர்வு எழதும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
by mohamed,Oman    18-மே-2012 08:36:59 IST
இட்ஸ் குட் for my education
by வாசுகி.c,India    18-மே-2012 08:33:04 IST
usefull
by ரவி v,India    18-மே-2012 08:31:29 IST
It is really wonderful method for peoples
by saranya,India    18-மே-2012 07:46:08 IST
I want to write the TET model exam
by nancy,India    17-மே-2012 20:20:14 IST
sir how to write mock test in kalvimalar website. i didnt find kalvimalar/tntet this link.can u hav model mock test papers
by கார்த்திக்,India    17-மே-2012 15:40:06 IST
நான் டெட் தேர்வை ஆன்லைனில் எழுத வேண்டும். அதன்பொருட்டு எனக்கு உதவ வேண்டுகிறேன்
by R .Suganthi,India    17-மே-2012 15:36:03 IST
super tips! try to achieve the target.
by ச.விசாலாட்சி,India    17-மே-2012 14:58:32 IST
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும் மற்றும் எப்பொழுது கிடைக்கும் அதற்கான வழிமுறைகள் என்ன? ஆசிரியர் தேர்வுக்கான குறைஞ்சபட்ச தகுதி என்ன? இவை அனைத்தையும் என்னுடைய மின்னஞ்சல் முலம் தெரிவிக்கவும் .... இப்படிக்கு உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பாக்கும் உங்கள் நண்பன் காமராஜ்
by காமராஜ்,India    17-மே-2012 13:19:07 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us