ஜுன் 4ம் தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! | Kalvimalar - News

ஜுன் 4ம் தேதி வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!மே 13,2012,12:59 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஜூன் 4ம் தேதி வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்தார்.

இதுதொடர்பான அறிவிப்பில் அவர் கூறுகையில், "ஏப்ரல் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, ஜூன் 4ம் தேதி, பிற்பகல் 1:30 மணிக்கு வெளியிட, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. 10 ஆயிரத்து 312 பள்ளிகளில் இருந்து, 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவர்கள், 3 ஆயிரத்து 33 மையங்களில், இத்தேர்வை எழுதினர். இதில், 5 லட்சத்து 45 ஆயிரத்து 707 பேர், மாணவர்கள்; 5 லட்சத்து 38 ஆயிரத்து 868 பேர், மாணவியர். 67 மையங்களில் நடந்த விடைத்தாள் திருத்தும் பணிகளில், 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

நேரம் மாறுவது ஏன்?: பொதுத்தேர்வு முடிவுகள், வழக்கமாக, காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஆனால், தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 22ம் தேதி, காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், நண்பகல் 1:30 மணிக்கு வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறும்போது, "தேர்வு முடிவு வெளியாகும் தேதி, நேரம் எல்லாவற்றையும், நாங்கள் முடிவு செய்வது கிடையாது. தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், எந்த தேதிகளில் முடியும் என்பதை வைத்து, சில தேதிகளை குறிப்பிட்டு, அதில் ஏதாவது ஒரு தேதியில் வெளியிடலாம் என, அரசுக்கு தெரிவிக்கிறோம். அதில், ஒரு தேதியை அரசு தேர்வு செய்கிறது,&'&' என்றனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us