கடலூர்: நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள இளநிலை வரைவு அலுவலர் பணியிடத்திற்கு மாநில பதிவு மூப்பு விவரங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள இளநிலை வரைவு அலுவலர் பணியிடத்திற்கு மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளது. பதிவு மூப்பு விவரங்கள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ள தகுதிவாய்ந்த மனுதாரர்கள் தங்களின் விவரங்களை சரிபார்க்கலாம். விடுபட்டிருந்தால் வேலை வாய்ப்பக அடையாள அட்டை மற்றும் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வரும் 16ம் தேதிக்குள் அணுகலாம்.
அதன்பிறகு பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.