இக்னோவில் ஆன்லைன் வேளாண் படிப்புகள் | Kalvimalar - News

இக்னோவில் ஆன்லைன் வேளாண் படிப்புகள்மே 05,2012,13:06 IST

எழுத்தின் அளவு :

டெல்லி: இந்த கல்வியாண்டில், வேளாண்மை தொடர்பான 2 ஆன்லைன் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை இக்னோ வரவேற்கிறது.

விவசாய கொள்கையில் முதுநிலை ஆன்லைன் சான்றிதழ் படிப்பு(PGCAP) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலை டிப்ளமோ படிப்பு(PGDFSQM) ஆகியவைதான் அந்தப் படிப்புகள்.

PGCAP படிப்பானது, வேளாண்மை தொடர்பான தேசிய கொள்கைகளை மேம்படுத்துதல் மற்றும் அமல்படுத்தல், திட்டமிடுதலுக்கான மனித வளத்தை மேம்படுத்தல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கானது. 6 மாத காலஅளவைக் கொண்ட இப்படிப்பில் சேர, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதுமானது.

PGDFSQM படிப்பின் நோக்கமானது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர மேலாண்மையில், மேம்பாடு, அமல்படுத்தல் மற்றும் தணிக்கை செய்தல் ஆகிய பணிகளுக்கு, நிபுணர்களை தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இப்படிப்பிற்கு, அறிவியல், கலை மற்றும் வணிகம் ஆகிய பிரிவுகளில் படித்து, அவை தொடர்பான அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்பின் குறைந்தபட்ச காலம் 1 வருடம் மற்றும் அதிகபட்ச காலம் 4 வருடங்கள்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us