வாழ்வை பளிச்சிடச்செய்யும் மின்னியல் | Kalvimalar - News

வாழ்வை பளிச்சிடச்செய்யும் மின்னியல் ஏப்ரல் 30,2012,15:13 IST

எழுத்தின் அளவு :

மின்சார பொறியியல் என்பது, சில நேரங்களில், மின்சார மற்றும் எலக்ட்ரானிக் பொறியியல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த துறை மின்சாரம், எலக்ட்ரானிக்ஸ், மின்காந்தவியல் போன்ற துறைகளையும் விவரிக்கிறது.

மின்சார பொறியியல், பெரிய அளவிலான மின்அமைப்புகளில் உள்ள பவர் டிரான்ஸ்மிஷன், மோட்டார் கன்ட்ரோல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றிப் படிப்பது. எலக்ட்ரானிக் பொறியியல் என்பது, சிறிய அளவில் உள்ள எலக்ட்ரானிக் அமைப்புகள் (கம்ப்யூட்டர்) போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி படிப்பது.

இப்படிப்பில் பல உட்பிரிவுகள் உள்ளன.
* பவர் இன்ஜினியரிங்
* கன்ட்ரோல் இன்ஜினியரிங்
* எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்
* மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ்
* சிக்னல் புராசசிங்
* டெலிகம்யூனிக்கேஷன் இன்ஜினியரிங்
* இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்

வழங்கும் படிப்புகள்:
* பி.இ., (எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்) 4 ஆண்டு
* எம்.இ., (எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்) 2 ஆண்டு
* டிப்ளமா (எலக்ட்ரிக்கல்) 2 ஆண்டு
* பி.ஜி., டிப்ளமா (எலக்ட்ரிக்கல்) 2 ஆண்டு
* சர்டிபிகேட் (எலக்ட்ரிக்கல் டெக்னிக்கேஷன் டிரேடு) 1 ஆண்டு

கல்வித்தகுதி: பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை பயின்றவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்படிப்பை வழங்கும் கல்லூரிகள்:
*ஐ.ஐ.டி., மும்பை
*ஐ.ஐ.டி., ரூர்கி
*ஐ.ஐ.டி., கவுகாத்தி
*ஐ.ஐ.டி., கான்பூர்
*ஐ.ஐ.டி., டில்லி
*ஐ.ஐ.டி., கோரக்பூர்
*நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி  திருச்சி
* நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி நெல்லை

வாய்ப்புகள்:
* ஜூனியர் இன்ஜினியர்
* எலக்ட்ரிகல் சிஸ்டம் கன்ட்ரோலர்
* பிஎல்சி., ஆப்பரேட்டர்
*புரோகிராமர்
*ஆசிரியர்

சம்பளம்:
இப்படிப்பை முடித்தவுடன் பணிக்கு செல்வோருக்கு மாதம் 11 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.

மேலும் விவரங்கள் அறிய http://www.ieee.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us