பெரியார் பல்கலையில் விண்ணப்பம் வினியோகம் | Kalvimalar - News

பெரியார் பல்கலையில் விண்ணப்பம் வினியோகம்ஏப்ரல் 30,2012,11:40 IST

எழுத்தின் அளவு :

சேலம் பெரியார் பல்கலையில், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் எம்.பில்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது.

சேலம் பெரியார் பல்கலையில் தமிழ், பொருளாதாரம், ஆங்கிலம், ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேசன், சமூகவியல், புவி அமைப்பியல், கணிதம், இயற்பியல், வேதியியல், பயோகெமிஸ்ட்ரி, உணவு அறிவியல், பயோடெக்னாலஜி, தாவரவியல், சுற்றுப்புற அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், விலங்கியல், மேலாண்மைக்கல்வி உள்ளிட்ட, 21 துறைகள் செயல்பட்டு வருகிறது.

இவற்றில் முதுகலை படிப்புகளும், எம்.பில்., படிப்புகளும் வழங்கப்படுகிறது. இதற்கான நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத்தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் பெரியார் பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

முதுகலை பட்டபடிப்பு மற்றும் எம்.பில்., படிப்புகளுக்கு, 300 ரூபாயும், எம்.பி.ஏ.,- எம்.சி.ஏ., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கு, 500 ரூபாயும், சான்றிதழ் படிப்புகளுக்கு, 100 ரூபாயும் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணத்தில், 50 சதவிகித சலுகை உண்டு.

மே 31 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us