உடற்கல்விக்கு புத்துயிர் அளிக்க அரசுக்கு கோரிக்கை | Kalvimalar - News

உடற்கல்விக்கு புத்துயிர் அளிக்க அரசுக்கு கோரிக்கைஏப்ரல் 17,2012,11:25 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பெயரளவில் உள்ள உடற்கல்விக்கு புத்துயிர் அளிக்கவும், இதற்கென பாடப் புத்தகங்களை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் தலைவர் சங்கர பெருமாள் வெளியிட்ட அறிக்கை: அரசு பள்ளிகளில், உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு, வெறும் 86 உடற்கல்வி இயக்குனர்கள்(நிலை 2) மட்டுமே உள்ளனர்.

மேல்நிலைப் பள்ளிகளில், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றிலும், குறைவானவர்களே பணியாற்றி வருகின்றனர். பள்ளிகளில், மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை வளர்க்கவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நிதி ஒதுக்கீடு கிடையாது. பெயரளவில்தான், உடற்கல்வி இருந்து வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்களை, வேறு பணிகளுக்கு பயன்படுத்துகிற கொடுமையும் நடக்கிறது. மற்ற பாடங்களுக்கு புத்தகங்கள் இருப்பதுபோல், உடற்கல்விக்கும் தனி பாடப் புத்தகம் உருவாக்க வேண்டும். இதற்கென, ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டு, பாடத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டன. ஆனால், ஏதோவொரு காரணத்தால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஒன்று முதல் பிளஸ் 2 வரை, உடற்கல்விக்கென பாடப்புத்தகம் வழங்க வேண்டும். உடற்கல்விக்கென ஒரு இணை இயக்குனர் பணியிடத்தை, உடற்கல்வி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

Instead of focusing on health and hygiene which aims at the physical and emotional development of every child, it is very sad to say that physical education has just become a routine formality in the school time .
by L.Lekshmiganthan,India    18-ஏப்-2012 06:01:19 IST
மிட்டிலேச்சூல் compulsory wanted
by victor,India    17-ஏப்-2012 14:16:59 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us