மாற்று திறனாளிகளுக்கு இலவச தொழிற் பயிற்சி | Kalvimalar - News

மாற்று திறனாளிகளுக்கு இலவச தொழிற் பயிற்சிஏப்ரல் 16,2012,11:30 IST

எழுத்தின் அளவு :

கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையுடன் கூடிய இரு மாத இலவச தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கலெக்டர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் சுயதொழில், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் என்.சி.வி.டி., சான்றிதழ் பயிற்சிகள் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி ஓசூர் ஐ.டி.ஐ., மற்றும் என்.சி.வி.டி., சான்றிதழ் பெற்ற தனியார் தொழில் பயிற்சி நிறுவனங்கள் மூலம் 75 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இரு மாதம் பயிற்சி உதவி தொகை, உணவு, தங்கும் வசதி ஆகியவை இலவசமாக செய்து தரப்படும்.

பயிற்சியில் சேர விரும்பும் 14 வயது பூர்த்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் வரும் ஏப்ரல் 25ம் தேதிக்குள் "மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண் 22, 23, தரைத்தளம், கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி' என்ற முகவரியை அணுகி விண்ணப்பித்து பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

இதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். ஏனெனில், நானும் இதைத்தான் ஆசைப்பட்டேன். ஊனமுற்றோர் என்றால் பாராட்டுவது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு தொழிலும் கற்றுக்கொடுத்து, வேலைவாய்ப்பு கொடுத்தால் நன்று. இதற்காக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டருக்கும், கல்விமலருக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
by தி. prasanth,India    17-ஏப்-2012 00:05:17 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us