திட்ட மேலாண்மை துறை - உலகெங்கிலும் பணி வாய்ப்புகள் | Kalvimalar - News

திட்ட மேலாண்மை துறை - உலகெங்கிலும் பணி வாய்ப்புகள்ஜனவரி 29,2013,17:55 IST

எழுத்தின் அளவு :

ஒரு பிரமாண்டமான பாலத்தையோ அல்லது விமான நிலையத்தையோ அல்லது கட்டடத்தையோ பார்க்கையில், நமக்கு பிரமிப்பாக தோன்றுவது இயற்கையே. இதுபோன்ற கட்டுமானத் திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க, திறமையான திட்ட மேலாண்மையே காரணம். Project management எனப்படும் இந்த செயல்பாட்டில், ஆதி முதல் அந்தம் வரை திட்டமிடுதல் மட்டுமே இடம் பெறாது.

மாறாக, செயல்படுத்தும்போது எழும் பிரச்சினைகளை சமாளித்தல், குறிப்பிட்ட நேரத்திற்குள் மற்றும் திட்டமிட்ட செலவுக்குள் அந்த வேலையை நிறைவு செய்தல் உள்ளிட்ட அனைத்தையும் யோசித்து தயாராக வேண்டும். பல பெரிய திட்டங்களின் வெற்றிகளும், தோல்விகளும், மேற்கூறிய அம்சங்களை கையாள்வதிலும், தேவையான, கடைசிநேர மாற்றங்களை செய்வதிலும் அடங்கியுள்ளன.

ஒரு முழுநீள தொழில்

திட்ட மேலாண்மை என்பது ஒரு முழுமையான தொழில். இத்தொழிலில், சவால்கள், ஆச்சர்யம் மற்றும் அபரிமித சம்பளம் போன்றவை கிடைக்கின்றன. இத்துறை வல்லுநர்கள், ஐடி/ஐடிஇஎஸ், கட்டுமானம், பொறியியல், நிதி, சுகாதாரம், டெலிகாம், கன்சல்டன்சி மற்றும் உற்பத்தி தொழில்துறை உள்ளிட்ட பலவிதமான துறைகளுக்கு, திட்ட மேலாண்மை நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது.

உலகெங்கிலும் திட்டமிடப்பட்டுள்ள ஏராளமான பணிகளுக்கு, 2013ம் ஆண்டு வாக்கில், மொத்தம் 60 லட்சம் திட்ட மேலாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதேசமயம், இவர்களை பணி நியமனம் செய்கையில், இவர்களின் தகுதிகள் மற்றும் திறமைகளும் சோதிக்கப்படுகின்றன.

வணிகப் பள்ளிகளில் கற்பிக்கப்படுதல்

நடைமுறையில், அனைத்து ஐஐஎம்.,களும், திட்ட மேலாண்மை தொடர்பாக, குறிப்பிட்ட வகையான பாடங்களை கற்பிக்கின்றன. பொதுவாக, எம்பிஏ பாடத்திட்டங்களில் இந்த Project Management பாடத்தின் அம்சங்கள் இடம்பெற்றாலும், ஒரு முழு நீள பாடமாக இது கற்பிக்கப்படுவதில்லை.

எனவே, Specialist courses மட்டுமே, இந்தக் குறையை தீர்ப்பனவாக உள்ளன. ஆனால், எம்பிஏ படிப்புகளில் இவை பரவலாக காணப்படுவதில்லை. மேலும், கட்டுமானம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளிலும், இப்பாடத்தின் அம்சங்கள் கலந்துள்ளன.

இத்தொழில் நிபுணர்களுக்கான தேவைகள்

தற்போது, சென்னை ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள், சிறந்த திட்ட மேலாளர்களை உருவாக்குவதற்கான அம்சங்களை, தனது கல்வித் திட்டத்தில் வைத்துள்ளன. சென்னை ஐஐடி வழங்கும் எம்பிஏ படிப்பில், திட்ட மேலாண்மையானது, மைய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பலவிதமான விருப்பப் பாடங்களால்(electives) அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, திட்ட மேலாளர்களுக்கான தேவைகள், உலகளவில் அதிகரித்துள்ளதால், அவற்றை ஈடுசெய்ய, மேலாண்மைப் பள்ளிகள், அத்துறை தொடர்பான படிப்புகள் வழங்குவதை உறுதிசெய்து, நிலைமையை சரிசெய்ய வேண்டியுள்ளது.

தகுதி சான்றிதழ்

ப்ராஜெக்ட் பயிற்சி பெறுநர்களுக்கு, அனைத்து வகையான கல்வி மற்றும் திறன் நிலைகளில், ஒரு விரிவான நிலையிலான சான்றிதழை, திட்ட மேலாண்மை கல்வி நிறுவனம் வழங்குகிறது. தற்போது 6 Credential -களை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்தப் படிப்பு, ஒருவரின் தொழில்ரீதியான அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்தையும் சோதிக்கிறது.

ப்ராஜெக்ட் மேலாளர்களால் மேம்படுத்தப்பட்டு, உங்களின் செயல்பாட்டு திறனின் சிறப்பை, PMI சான்றிதழ் உறுதி செய்கிறது. இந்த செயல்பாடானது, ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் ப்ரொபஷனல்(PMP) மூலமாக விவரிக்கப்படுகிறது. மேலும், தர மேலாண்மை அமைப்புகளுக்காக, ISO 9001:2000 நிலையில், PMP பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அங்கீகாரம்

PMI Certification, சர்வதேச அளவில் அங்கீகாரமும், மதிப்பும் பெற்றவையாக உள்ளன மற்றும் முறைமைகள், தர நிலைகள் மற்றும் தொழிற்கூடங்கள் ஆகியவற்றுக்கு இடையில், மாற்றத்தக்க வகையில் உள்ளன. இதன்மூலம், திறமையை அளவிடுவதில், இதுவொரு நம்பத்தகுந்த அம்சமாக உள்ளது.

திட்ட மேலாளர்களுக்கான தேவைகள்

இன்றைய உலகின் மொத்த உற்பத்தில் 5ல் 1 பங்கு, அதாவது, 12 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், திட்டங்களுக்காக செலவிடப்படுகின்றன. எனவே, இத்துறைக்கு, திறன்வாய்ந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள்.

நாளுக்கு நாள், திட்டப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பெருகி வருவதாலும், அத்துறையிலுள்ள பலபேர் ஓய்வுபெற்று செல்வதாலும், இத்துறைக்கு தேவையான மனிதவளம் அதிகரித்து வருகிறது.

வேலைவாய்ப்பை அதிகரித்தல்

இத்துறையில் வாய்ப்புகள் அதிகரித்துவரும் அதேநேரத்தில், PMI Certification என்பது, உங்களின் தயார்நிலையை மேலும் உறுதிபடுத்துகிறது. மருத்துவம், தொலைதொடர்வு, நிதி, ஐடி மற்றும் கட்டுமானம் ஆகிய பல்வேறான துறைகளில், ஏற்கனவே, PMI Credential பெற்ற 4 லட்சத்து 66 ஆயிரம் பேர் உள்ளனர். இத்துறையில், நுழைய, உங்களுக்கான நேரமிது.

ஏனெனில், காலிப்பணியிடங்கள் மிக அதிகமாக உள்ளன. திட்ட மேலாண்மை திறனைக் கொண்டிருந்து, திட்ட மேலாளர் பணியை நீங்கள் விரும்பவில்லை என்றாலும், நெரிசல் மிகுந்த வேலைவாய்ப்பு சந்தையில், உங்களுக்கு விருப்பமான பணிகளை பெற முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us