எனது பெயர் சுகுனா. நான் அடுத்த ஆண்டு எனது பி.காம் படிப்பை முடிக்கவுள்ளேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ அல்லது சி.எப்.ஏ ஆகிய படிப்புகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளது. எனவே, எந்தப் படிப்பு நல்ல வாய்ப்புகளைத் தரக்கூடியது என்பதை தெரியப்படுத்தவும். | Kalvimalar - News

எனது பெயர் சுகுனா. நான் அடுத்த ஆண்டு எனது பி.காம் படிப்பை முடிக்கவுள்ளேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ அல்லது சி.எப்.ஏ ஆகிய படிப்புகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளது. எனவே, எந்தப் படிப்பு நல்ல வாய்ப்புகளைத் தரக்கூடியது என்பதை தெரியப்படுத்தவும்.மே 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

CFA(chartered financial analyst) என்பது தேர்வெழுதி தேர்ச்சிபெற வேண்டிய ஒரு தொழில்முறை படிப்பு. இந்தப் படிப்பின் மூலமாக, முதலீடு, ஆடிட்டிங் மற்றும் நிதி பகுப்பாய்வு போன்ற துறைகளில் நீங்கள் வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள். அதேசமயம், MBA படிப்பதன் மூலமாக, நிதி, மனிதவளம், மார்க்கெடிங் உள்ளிட்ட பல துறைகளில்(உங்களின் specialisation -ஐ பொறுத்தது) நிர்வாக பணி வாய்ப்புகளை பெறுவீர்கள்.

நீங்கள் தேர்வுசெய்யும் படிப்பானது, உங்களின் விருப்பப் பாடம், திறமை மற்றும் தனிப்பட்ட ஆளுமை ஆகியவற்றுக்கு ஒத்துவரக் கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம், இந்த 2 படிப்புகளில் எதைப் படித்தாலும், அபரிமிதமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us