இந்தியாவில் மூடுவிழா காணும் பல வணிகப் பள்ளிகள் | Kalvimalar - News

இந்தியாவில் மூடுவிழா காணும் பல வணிகப் பள்ளிகள்பிப்ரவரி 19,2012,10:59 IST

எழுத்தின் அளவு :

மும்பை: எம்.பி.ஏ கடைவிரித்து வியாபாரம் செய்ய நினைத்த, இந்தியாவின், பல தரமற்ற மேலாண்மை பள்ளிகள் இன்று மூடுவிழா நடத்தும் நிலைக்கு வந்துள்ளன.

இந்தியக் கல்வித்துறையை பொறுத்தமட்டில், சிறிதுகாலம் முன்புவரை, எம்.பி.ஏ. என்றாலே ஒரு தனி மவுசுதான். வணிகத்தில் ஆர்வமுள்ள நபர்களை மட்டுமல்ல, மேலாண்மை துறைகளில் சாதிக்க விரும்பும் நபர்களையும் அதிகம் கவரும் படிப்பாக எம்.பி.ஏ இருந்தது.

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. உலகப் பொருளாதார மந்தநிலையானது, அந்தப் படிப்பிற்கான அபரிமித மயக்கத்தை குறைத்துவிட்டது. எம்.பி.ஏ படிப்பிற்கு அதிக மவுசு இருக்கையில், வேகமாக வளர்ந்து வந்த இந்திய மேலாண்மை கல்வித் துறையானது, தற்போது சுருங்கத் தொடங்கி விட்டது.

இதனால்தான், இந்தியாவில் தற்போதைய நிலையில் சுமார் 65 மேலாண்மை பள்ளிகள் வரை மூடப்படவுள்ளன. அந்த மேலாண்மைப் பள்ளிகள், இனிமேலும் எம்.பி.ஏ படிப்பை வழங்குவதன் மூலமாக வரும் வருமானத்தை நம்பியிராமல், அந்த இடத்தை வேறுபல லாபகரமான தொழிலுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. மேலும், தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் மேலாண்மை கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் முன்வருவதில்லை. இதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில், இதுபோன்ற நிலையிலுள்ள மேலும் பல வணிகப் பள்ளிகள் நிச்சயமாக மூடப்படும் என்றும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாடத்திட்டமானது, நடைமுறை வியாபார நிலைமைகளுக்கு மாறுபட்டிருப்பது, சரியான ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது, இதைவிட, மிகவும் குறைந்த நிறுவனங்களே வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொள்வது போன்ற பலவிதமான அம்சங்கள், பல வணிகப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதற்கு மூலகாரணங்கள் ஆகும்.

இதுபோன்ற மேலாண்மைப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதால், எம்.பி.ஏ ஆசையே மாணவர்களுக்கு விட்டுப்போய் விட்டது என்பது அர்த்தமல்ல. அவர்கள் சரியான கல்வி நிறுவனத்தை தேடுகிறார்கள் என்பதுதான் அர்த்தம். இன்றும், வெறும் 3000 இடங்களை மட்டுமே கொண்டுள்ள இந்திய IIM -களில் சேர்வதற்காக, லட்சக்கணக்கான மாணவர்கள் CAT தேர்வை எழுதுகிறார்கள். அந்தளவிற்கு மாணவர்களிடம் எம்.பி.ஏ மோகம் இருக்கிறது.


வாசகர் கருத்து

Time to face the music armed with this great inofmratoin.
by Moises,India    09-மே-2012 11:40:47 IST
Its good to see someone thinking it through.
by Rohitsinh,India    09-மே-2012 04:20:58 IST
In MBA what we find in many colleges are totally corrupt practices from collecting money .... fees etc They take amount without giving receipt. Receive the amount only by cash/cheque in less than Rs 20,000/- in different persons name to avoid tax.... Cheating the govt. The parents are also party to it due to these unscrupulous elements. Otherwise you will not get the seat in managent quota. Rs 3.5 lakhs as donation minimum ... tax free money is being looted by PESIT istitutions. Where to go and tell the looters of the nation very well in the name of education. If you talk more you may not get seat and student community is voiceless. The govt is the major looter in this. How and I need not explain to the people. MBA is the major shine for the students. For that matter getting a degree and unemployablity has grown in proportions. Students may have a degree and qualified education is not there as that of IIM. What to do?? Students sufferand inturn the community suffers.
by A .Natarajan,India    20-பிப்-2012 12:49:47 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us