நான் பிரகதி. பி.காம் முடித்திருக்கிறேன். எனக்கு 3 வருடங்கள் பணி அனுபவம் இருக்கிறது மற்றும் எச்.ஆர் அல்லது நிதி துறையில் எம்பிஏ படிக்க விரும்புகிறேன். பகுதி நேர எம்பிஏ படிப்பது சிறந்ததா அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பது சிறந்ததா? தொலைநிலைப் பட்டத்திற்கு எங்கு அங்கீகாரம் கிடைக்கும்? | Kalvimalar - News

நான் பிரகதி. பி.காம் முடித்திருக்கிறேன். எனக்கு 3 வருடங்கள் பணி அனுபவம் இருக்கிறது மற்றும் எச்.ஆர் அல்லது நிதி துறையில் எம்பிஏ படிக்க விரும்புகிறேன். பகுதி நேர எம்பிஏ படிப்பது சிறந்ததா அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பது சிறந்ததா? தொலைநிலைப் பட்டத்திற்கு எங்கு அங்கீகாரம் கிடைக்கும்?பிப்ரவரி 26,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

முழுநேர எம்பிஏ படிப்பை மேற்கொள்ள முடியாத சூழலில், பகுதிநேர எம்பிஏ படிப்பே சிறந்தது. எம்பிஏ படிப்பு என்பதில், படிப்பு நிலையிலான திட்டங்கள் மற்றும் சமநிலையிலான ஊடாடல் ஆகியவையே முக்கியமான கற்றல் முறைகள். இந்த காரணம்தான், முழுநேர எம்பிஏ படிப்பை, தொலைநிலையில் மேற்கொள்ள தூண்டுகிறது. தொலைநிலை எம்பிஏ படிப்பானது, ஏற்கனவே, எக்ஸிகியூடிவ் நிலையிலான பணியில் இருப்பவர்களுக்கு உகந்தது. இதன்மூலம் நீங்கள் உயர்பணிகளுக்கு செல்லலாம்.

தகுதிநிலையைப் பொறுத்தவரை, தொலைநிலைக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எம்பிஏ, உயர்கல்வி மற்றும் அரசுப் பணிகளுக்கு உகந்தது. அதேசமயம், DEC - AICTE - UGC ஆகியவை இணைந்த கூட்டுக் கமிட்டி செயல்பாட்டிற்கு வந்த பின்னர், அதன் அங்கீகாரமும் தேவைப்படும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us