பள்ளிக்கு ஒரு நூலகம் அவசியம் | Kalvimalar - News

பள்ளிக்கு ஒரு நூலகம் அவசியம்அக்டோபர் 25,2012,12:54 IST

எழுத்தின் அளவு :

இணையதளம், மொபைல் என நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நமது தகவல் பரிமாற்றம் பெரிதும் வேகமாக வளர்ந்துள்ளது. எனினும் வாசிப்பது என்னும் பழக்கத்தின் நுட்பமான பயன்பாட்டை அதை அனுபவிப்பவர் மட்டுமே அறிவர்.

வாசிக்கும் பழக்கம் மூலமே பல தலைவர்கள் தங்களது அறிவை மேம்படுத்தியுள்ளனர் என்பதுற்கு பல சான்றுகள் உள்ளன.  ‘இளமையில் கல்வி என்ற பழமொழிக்கு ஏற்பட வாசிக்கும் பழக்கத்தையும் சிறுவயதில் இருந்தே தொடங்க வேண்டும்.  மாணவர்கள் அறிவைப் பெருக்குவதற்கு வகுப்றை புத்தகத்துடன் நுõலகத்தில் உள்ள புத்தகங்கள் பலவற்றையும் படிக்க வேண்டும்.

நுõலக பயன் பாட்டை ஒருவர் அறிந்துகொள்ளும் சரியான தருணம் என்பது பள்ளிப்பருவம் தான். பள்ளிப் பருவத்தில் நுõலக பயன்பாடானது சரியாக தொடங்கப்பட்டால் எதிர்கால பயன்பாடு மிக மிக முக்கியமானதாகும்.

பள்ளிகள் தங்களது நுõலகங்களை சரியான முறையில் மாணவர்கள் பயன்படுத்துவது குறித்து பல குறிப்புகளை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

* வகுப்பறை நுõலகங்களில் குழந்தைகள் இலக்கியம், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, படக்கதை, கற்பனைக் கதை, நகைச்சுவை, புதிர், நெடுங்கதை, வாழ்க்கைக் குறிப்பு, பரீட்சார்த்தக் கதைகள், இதழ்கள், நாளிதழ்கள் போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.

* மாணவர்களோடு கல்லுõரியின் நுõலகத்திற்கு ஆசிரியர்கள் சென்று மாணவர்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களை அவர்கள் பெறுவதற்கு உதவுவது மிக முக்கியம். வகுப்பறையில் நடத்தப்படும் பாடத்திற்கு உபயோகமான நுõல்களை ஆசிரியர்கள் நுõலகங்களில் முன் கூட்டியே வைத்திட வேண்டும்.

* நுõலகங்களில் ஆங்கில மொழி வாயிலான நுõல்களை மட்டும் வைக்காமல் பிற மொழி நுõல்களையும் வைப்பது மொழிகளின் இணையான அர்த்தத்தை உணர உதவுவதோடு குழந்தைகளுக்குத் தேவையான மொழிகளுக்
கிடையேயான பரிமாற்றத் தேவைகளையும் நிறை வேற்றும்.

* நுõலகங்களில் வாசிப்பதற்குக் குறிப்பிட்ட காலத்தை ஒதுக்குமாறு செய்ய வேண்டும். இது வகுப்பறை நேரத்துடன் இல்லாமல் வாசிக்க தனியான முக்கியத்துவத்துடன் தரப்பட வேண்டும்.

* படித்தது பற்றிய கருத்துக்களை அறிவதும் முக்கியம். வாய்மொழியாக அவை முதலில் பெறப்பட்டு பின்பு எழுத்து வடிவமாகவும் பெறப்படலாம்.

* தேவைக்கேற்ப புதிய புத்தகங்களை நுõலகத்திற்கு வாங்குவது மிக அவசியமான ஒன்று. இது போலவே புதிய இதழ்களும் பத்திரிகைகளும் வாங்கப்பட வேண்டும்.

* வகுப்பறையிலோ சிறிய குழுவிலோ புத்தக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் செய்வதும் முக்கியமான செயல். புத்தகங்களை குழந்தைகளே தேர்வு செய்யச் சொல்வதும் அவசியமான ஒன்று. எதிர்பாராமல் புத்தகங்கள் கிழிந்துவிட்டால் குழந்தைகளே அதை சரி செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

* வகுப்பறை நுõலகங்களை நடத்துவது அதிக செலவு பிடிக்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் பல குழந்தைகள் பதிப்பகங்கள் செலவு குறைவான புத்தகங்களை வெளியிடுகின்றன. எனவே வகுப்பறை நுõலகங்களை ஏற்படுத்துமாறு பெற்றோரும் வலியுறுத்த வேண்டும்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us