எனது பெயர் வள்ளி. நான் பிபிஎம் முடித்துவிட்டு, எம்பிஏ -வில் எச்ஆர் ஸ்பெஷலைசேஷன் முடித்துள்ளேன். எனக்கு எச்டி மற்றும் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த அனுபவமும் உண்டு. இன்னும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால், சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில், டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிடி துறையில் முதுநிலை டிப்ளமோ படிக்க முடிவெடுத்துள்ளேன். நான் இன்னும் படிப்பில் சேரவில்லை. எனது முடிவு சரியானதுதானா? மற்றும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் குறித்து கூறவும். | Kalvimalar - News

எனது பெயர் வள்ளி. நான் பிபிஎம் முடித்துவிட்டு, எம்பிஏ -வில் எச்ஆர் ஸ்பெஷலைசேஷன் முடித்துள்ளேன். எனக்கு எச்டி மற்றும் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த அனுபவமும் உண்டு. இன்னும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால், சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில், டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிடி துறையில் முதுநிலை டிப்ளமோ படிக்க முடிவெடுத்துள்ளேன். நான் இன்னும் படிப்பில் சேரவில்லை. எனது முடிவு சரியானதுதானா? மற்றும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் குறித்து கூறவும்.ஜனவரி 18,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை துறையில் உங்களுக்கு ஆர்வமிருந்தால், தாராளமாக இப்படிப்பை தேர்ந்தெடுக்கலாம். அதேசமயம், உங்களுக்கு சிறந்த தகவல்-தொடர்பு திறன் இருக்க வேண்டும். உங்களுக்கு ஒருசில வெளிநாட்டு மொழிகள் பேசத் தெரிந்திருந்தால், இத்துறையில் சிறப்பான எதிர்காலம் உண்டு.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையானது, உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறையாகும். இத்துறையில் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 7.25 கோடி பேர் பணிபுரிகின்றனர். இ-காமர்ஸ் மற்றும் உலகமயமாக்கல் போன்றவை வளர்ந்து வருவதால், கூட்டம் மற்றும் மாநாடுகள், கவர்தல், நிகழ்ச்சி திட்டமிடுதல், பயணம், கேமிங், போக்குவரத்து, ஆகாயப் பயணம், பொழுதுபோக்கு மற்றும் உணவு-பானங்கள் துறை ஆகியவற்றில் ஏராளமான வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன.

எனவே, தயங்காமல் அட்மிஷன் வேலையைத் தொடரவும்.

Search this Site

மேலும்