என் பெயர் கலைவாணன். ஆட்டோமொபைல் டிசைன் தொழில்துறை மற்றும் அதற்கான வாய்ப்புகள் பற்றியும், அத்துறையில் எவ்வாறு நுழைவது என்பது பற்றியும் தயவுசெய்து கூறுங்கள். | Kalvimalar - News

என் பெயர் கலைவாணன். ஆட்டோமொபைல் டிசைன் தொழில்துறை மற்றும் அதற்கான வாய்ப்புகள் பற்றியும், அத்துறையில் எவ்வாறு நுழைவது என்பது பற்றியும் தயவுசெய்து கூறுங்கள்.ஜனவரி 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆட்டோமோடிவ் டிசைன் என்பது, மோட்டார் வாகனங்களின் தோற்ற மேம்பாடு, எர்கோனோமிக்ஸ் ஆகிவற்றோடு தொடர்புடைய தொழில்துறையாகும். மோட்டார் சைக்கிள்கள், டிரக்குகள், பேருந்துகள், கோச் வாகனங்கள் மற்றும் வேன்கள் ஆகியவை இவற்றோடு தொடர்புடையவை. ஒரு நவீன மோட்டார் வாகனத்தின் செயல்பாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாடானது, ஆட்டோமோடிவ் இன்ஜினியரிங் உள்ளிட்ட பலவிதமான துறைகளை சேர்ந்த நிபுணர்களால் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஆட்டோமோடிவ் டிசைன் என்பது தயாரிப்பு கருத்தாக்க உருவாக்கத்தில் தொடர்புடையதாக இருந்தாலும், இத்தகைய சூழலில்,  என்பது ஒரு வாகனத்தின் அழகியல் மற்றும் காட்சித் தோற்றம் ஆகியவற்றோடு தொடர்புடையதாக கருதப்படுகிறது. தொழில்துறை மற்றும் போக்குவரத்து வடிவமைப்பில் பட்டம் பெற்ற கலைப் பின்புலம் கொண்டவர்கள்தான், ஆட்டோமோடிவ் வடிவமைப்பை மேற்கொள்கிறார்கள்.

நீங்கள் ஒரு ஆட்டோமோடிவ் வடிவமைப்பு பொறியாளராக உருவாக விரும்பினால், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்று, மும்பை-ஐஐடி நடத்தும் சிஇஇடி தேர்வை எழுதி, அதன்மூலம் எம்.டிஇஎஸ் படிப்பில் சேர்ந்து, ஆட்டோமோடிவ் வடிவமைப்பில் சிறந்த நிபுணராகலாம். இல்லையெனில், வடிவமைப்பிற்கான தேசிய கல்வி நிறுவனம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, அதே நிறுவனத்தில், ஆட்டோமோடிவ் டிசைன் பாடத்தில் முதுநிலைப் படிப்பில் சேரலாம். மேற்கூறிய நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் நிச்சயம் என்பதால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

Search this Site