பி.எஸ்சி., நர்சிங் படித்திருப்பவர் அமெரிக்க விசா பெற முடியுமா? | Kalvimalar - News

பி.எஸ்சி., நர்சிங் படித்திருப்பவர் அமெரிக்க விசா பெற முடியுமா? பிப்ரவரி 08,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

நிச்சயம் பெறலாம். எச்1பி விசா பெற பி.எஸ்சி., நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டுகள் நர்சாக அங்கீகரிக்கப்பட்ட ஆஸ்பத்திரி ஒன்றில் பணிபுரிந்திருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட நர்சாக பணி புரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சி.ஜி.எப்.என்.எஸ்., தேர்வில் நீங்கள் தகுதி பெற்றிருக்க வேண்டும். டோபல் போன்ற தேர்விலும் பாஸ் செய்திருக்க வேண்டும்.

விசா நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் போது விசா ஸ்கிரீனிங் தேர்வு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தற்போது இந்தியாவிலேயே பல தனியார் நிறுவனங்கள் இது போன்றவற்றை உங்களுக்காகப் பெற்றுத் தர காத்திருக்கின்றன. இவற்றின் சேவைக்கு ஒரு கட்டணத்தை செலுத்தினால் போதும், இவற்றை இந்த நிறுவனங்களே பார்த்துக் கொள்கின்றன.

பி.எஸ்சி.,நர்சிங்கோ டிப்ளமோ நர்சிங்கோ படிக்கத் தொடங்கும் காலத்திலேயே சி.ஜி.எப்.என்.எஸ்., போன்ற தேர்வுகளுக்கு நீங்கள் தயாராகத் தொடங்குவது மிக அவசியம் என்பதை மனதில் கொள்ளவும். படிப்பின் தலாமாண்டிலிருந்தே உங்களது அடிப்படை ஆங்கிலம், பாடங்களில் ஆழ்ந்த விஷய ஞானம், பரவலான பொது அறிவு மற்றும் மருத்துவத் துறையின் அன்றாட நிகழ்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிவது போன்றவற்றைப் பெற நீங்கள் முயலுவது மிக அவசியமாகும்.

நம் ஊரில் டாக்டர்களை விட அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் நர்சுகளுக்குத் தரும் சம்பளம் அதிகம். ஆனால் அதற்கேற்ற திறனைப் பெற்றிருப்பது தான் உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும். எனவே இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ப தயாராகுங்கள். மேலை நாடுகளில் மருத்துவத் துறை என்பது காப்பீடு, கன்ஸ்யூமர் இயக்கங்களோடு மிகவும் நெருக்கமான தொடர்புடையது என்பதால் பணியின் சவால்கள் அதிகம். எனவே இதற்கேற்ப தயாராவதில்தான் உங்களது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us