மனித உரிமைகள் தொடர்பான படிப்பை தொலை தூரக் கல்வியில் எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

மனித உரிமைகள் தொடர்பான படிப்பை தொலை தூரக் கல்வியில் எங்கு படிக்கலாம்? ஜனவரி 17,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்னும் சிறப்பு நிறுவனம் தொலைதூரக் கல்வி முறையில் இப் பிரிவில் 2 ஆண்டு பட்ட மேற்படிப்பைத் தருகிறது. பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்கும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்ற பெயரில் புதுடில்லியில் மாற்றத்தக்கதாக டிடியை எடுத்து அனுப்பி இதற்கான விண்ணப்பம் பெறலாம்.

விண்ணப்பம் பெற்றபின் நிரப்பி, 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடனும் அனைத்து சான்றிதழ்களின் அட்டெஸ்டட் நகல்களுடனும் கட்டணத்திற்கான டிடியை மேற்கண்டவாறே எடுத்து அனுப்ப வேண்டும். இது கட்டணத்தின் முதல் தவணை மட்டுமே. இது பதிவுத் தபால் மூலமாகத் தான் அனுப்பப்பட வேண்டும்.

இது பற்றிய பிற விபரங்களை அறிய இணைய தள முகவரி: http://www.rightsedu.net.  இப்படிப்புக்கான தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும். நமக்கு அண்மையில் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இது நடத்தப்படும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us