எம்.பி.ஏ., படிப்பை புதிதாக முடிப்பவருக்கு இன்ஜினியரிங் பிரெஷர்களுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளனவா? | Kalvimalar - News

எம்.பி.ஏ., படிப்பை புதிதாக முடிப்பவருக்கு இன்ஜினியரிங் பிரெஷர்களுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளனவா? அக்டோபர் 19,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய கால கட்டத்தில் இது போன்ற வாய்ப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன. பொதுவாக இதில் பல வேலைகள் மார்க்கெட்டிங்கோடு தொடர்புடையவை. ஆனாலும் பிற வாய்ப்புகளும் இன்றையச் சூழலில் அதிகமாகக் கிடைக்கின்றன.

மேனேஜ்மென்ட் டிரெய்னி, சேல்ஸ் எக்சிகியூடிவ், மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ், டிரெய்னி அனலிஸ்ட், பினான்சியல் ரிசர்ச், டேட்டா அனலிஸ்ட், எச்.ஆர்.டிரெய்னி, டிரெய்னி ரெக்ரூட்டர், கிரெடிட் அசிஸ்டண்ட் மேனேஜர், பிசினஸ் டெவலப்மெண்ட் எக்சிகியூடிவ், புராஜக்ட் டிரெய்னி போன்ற பணியிடங்கள் புதிதாக எம்.பி.ஏ., முடிப்பவருக்காக அறிவிக்கப்படுகின்றன.

பல ஐ.டி. பணிகளில் அட்ரிஷன் விகிதம் அதிகமாக இருப்பதைப் போலவே, எம்.பி.ஏ., தகுதி பெற்றிருப்போரின் அட்ரிஷன் விகிதமும் அதிகமாக காணப்படுகிறது.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us