உளவியல் (சைக்காலஜி) | Kalvimalar - News

உளவியல் (சைக்காலஜி)ஜனவரி 20,2010,14:01 IST

எழுத்தின் அளவு :

அதற்கான காரணங்களை கண்டறிதல், இதைக் குணமாக்குதல் பற்றிய படிப்பு தான் உளவியல் (சைக்காலஜி). சைக்காலஜி துறையானது மனிதனுடைய மனதையும், நடத்தையையும் பற்றி படிக்கும் படிப்பாகும். இந்த துறையில் வல்லவர்கள் சைக்காலஜிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தனிமனிதனின் புலன் உணர்வு, அறிவாற்றல், செயல்திறன், மன
அழுத்தம், ஆளுமை, நடத்தை ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து உரிய தீர்வு அளிக்கின்றனர்.

உளவியல் சார்ந்த அறிவானது அன்றாட வாழ்வில் உள்ள கல்வி, குடும்பம், தொழில் உள்ளிட்டவைகளை பற்றி முழுவதும் ஆராய்ச்சி செய்கிறது. மேலும் அவற்றால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், அதற்கான தீர்வுகள் என அனைத்தையும் காண்கின்றன. இந்த உளவியல் துறையானது மானிட வளர்ச்சி, விளையாட்டு, உடல்நலம், உழைப்பு, ஊடகம், சட்டம் என சில பல பிரிவுகளை கொண்டது. நம்நாட்டில் இத்துறைக்கான வளர்ச்சி விகிதம் மிகவும் அதிகமாக <<உள்ளது. இத்துறையில் ஈடுபாடு கொண்டு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது.


தோற்றம்: உளவியல் என்பது கிரேக்க சொல்லிலிருந்து உருவானதாகும்.  மனதை படிப்பது என்பது அதன் பொருளாகும். 1802 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பியர் கேபானிஸ் எனும் உளவியல் நிபுணர் உயிரியல் தொடர்பான உளவியல் ஆய்வை மேற்கொண்டார். இவரது ஆய்வின் முடிவில் ஒரு உயிரினத்தின் புலனுணர்வு, ஆத்மா ஆகியவை நரம்பு மண்டலத்தின் உடைமைகளாகும் என்றார். 1879ஆம் ஆண்டு ஜெர்மனைச் சேர்ந்த இயற்பியல் வல்லுனர் வில்ஹெம் உண்ட் உளவியல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்தார்.

 

இதன் காரணமாக இவர் உளவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1950 களில் உண்ட், ஜேம்ஸ், எப்பினாஸ் போன்ற ஆராய்ச்சியாளர்கள் உளவியல் தொடர்பான ஆய்வுகளை வரையறுத்தனர்.


துணைப்பிரிவுகள்


உளவியல் பிரிவானது சில துணைப்பிரிவுகளை உள்ளடக்கியது. அவைகளாவன:


*நெறிபிறழ்வான உளவியல் (Abnormal Psychology)
* உயிரியல் உளவியல் (Biological psychology)
* மருத்துவ உளவியல் (Clinical psychology)
* புலனுணர்வு சார்ந்த உளவியல் (Cognitive psychology)
* சமூகம் சார்ந்த உளவியல் (Community Psychology)
* ஒப்பீடு சார்ந்த உளவியல் (Comparative psychology)
* ஆலோசித்தல் தொடர்பான உளவியல் (Counselling psychology)
* நெருக்கடி தொடர்பான உளவியல் (Critical Psychology)
* வளர்ச்சி சார்ந்த உளவியல் (Developmental Psychology)
* கல்வி சார்ந்த உளவியல் (Education Psychology)
* பரிணாம உளவியல் (Evolutionary Psychology)
* நீதிமன்றம் தொடர்பான உளவியல் (Forensic Psychology)
* உலகளாவிய உளவியல் (Global Psychology)
* உடல்நலம் சார்ந்த உளவியல் (Health Psychology)

* தொழில் ரீதியான உளவியல் (Industrial and Organisation Psychology
* சட்டம் சார்ந்த உளவியல் (Legal Psychology)
* ஆளுமை சார்ந்த உளவியல் (Personality Psychology)


பயிலும் கல்வி நிறுவனங்கள்:
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை
* பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
* அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்
* அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், கோவை
*எத்திராஜ் பெண்கள் கல்லூரி , சென்னை
* பிரெசிடென்சி கல்லூரி, சென்னை
* டாக்டர் எம்.ஜி.ஆர்.,ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை
* டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி
ஆராய்ச்சி முறைகள்:
* தரம் மற்றும் அளவு சார்ந்த ஆராய்ச்சி (Qualitative and Quantitative research):
உளவியலின் பெரும்பாலான ஆராய்ச்சிகள் தரங்களை ஒட்டியே நடத்தப்படுகின்றன. நிபுணர்கள் கோட்பாடு நலன் கொண்ட வகைப்பாடுகள், பொது விளக்க கோட்பாடுகள் ஆகியவற்றை தரம் மற்றும் அளவுகள் சார்ந்து உருவாக்குகின்றனர்.


* கட்டுப்பாடுடைய ஆய்வுகள் (Controlled experiments): விஞ்ஞான முறையில் நடத்தை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள இது பயன்படுகிறது. கட்டுப்பாடான நிலவரங்கள் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.


* சர்வே மேற்கொள்ளுதல் (Survey Questionnaires): உளவியல் ரீதியாக மனோபாவம், தோற்றத்தின் தன்மை ஆகியவை தொடர்பான தலைப்புகள் சர்வேக்களாக பயன்படுத்தப்படுகின்றன.


* நீண்ட கால ஆய்வுகள் (Longitudinal Studies): நீண்ட கால ஆய்வு முறை என்பது ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பல ஆண்டு காலம் ஆய்வு மேற்கொள்வதாகும். மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும் ஆய்வுகள் இது தொடர்பானவையாகும். மொழியியல் ஊறுகள் ( எஸ்.எல்.ஐ.,) தொடர்பான ஆய்வுகளை உதாரணமாக கூறலாம்.


* இயற்கை கூறுகளை உற்று நோக்கல் (Observation in natural settings):

இதற்கு உதாரணம், ஜேன்குட்ஆல் எனும் ஆராய்ச்சியாளர் சிம்பன்சி இன வகையை சேர்ந்த குரங்கின் வாழ்க்கை முறை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டதை கூறலாம். இதே போல் மனிதனின் சமூகம், குடும்பம் சார்ந்த வாழ்க்கை முறைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.


* நரம்பு மண்டல ஆய்வுகள் (Neuropsychological methods):
நரம்பு மண்டலம் சார்ந்த ஆய்வுகள் இந்த ஆய்வு முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.


* கம்ப்யூட்டர் தொடர்பான ஆய்வுகள் (Computational modelling):
தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வுகளை மேற்கொள்ளவும், புள்ளிவிபரங்களை சேகரிக்கவும் இந்த முறை ஆய்வுகள் உதவுகின்றன.


* விலங்குகள் பற்றிய ஆய்வுகள் (Animal Studies):
முந்தைய காலத்திலிருந்தே <உளவியல் தொடர்பான ஆய்வுகள் விலங்குகளில் அதிகம் நடத்தப்பட்டுள்ளன. குரங்குகள், எலிகள், நாய்கள், உள்ளிட்ட சில விலங்குகள் அடிக்கடி ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன.

« முதல் பக்கம்
Share
கட்டுரைகள் முதல் பக்கம் »
Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us