மருத்துவத்தை கைவிட்ட 44 மாணவர்கள்; இன்ஜி., கவுன்சிலிங்கிலும் ‘ஆப்சன்ட்’ அதிகம் | Kalvimalar - News

மருத்துவத்தை கைவிட்ட 44 மாணவர்கள்; இன்ஜி., கவுன்சிலிங்கிலும் ‘ஆப்சன்ட்’ அதிகம்

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் படிப்பில் முதல் 3 நாள் கவுன்சிலிங்கில் மொத்தம் 44 மாணவர்கள் மருத்துவப் படிப்பை கைவிட்டு, பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.


அதேசமயம், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்து கவுன்சிலிங்கிற்கு வராதவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான இடங்க காலியாக இருக்கும் என தெரிகிறது.


பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்கில், முதல் இரண்டு நாட்களில் ஆயிரத்து 580 மாணவர்கள் இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். இதில் 566 பேர் .சி.., பிரிவையும், 322 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவையும், 186 பேர் .டி., பிரிவையும், 169 பேர் மெக்கானிக்கல் பிரிவையும், 123 பேர் எலக்ட்ரிக்கல் பிரிவையும், 43 பேர் சிவில் பிரிவையும், 28 பேர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பிரிவையும் தேர்ந்தெடுத்திருந்தனர்.


மீதமுள்ள மாணவர்கள் இதர பிரிவுகளைத் தேர்ந்தெடுத்திருந்தனர். ஜூலை 13ம் தேதி நடந்த மூன்றாம் நாள் கவுன்சிலிங்கிற்கு ஆயிரத்து 726 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், ஆயிரத்து 398 பேர் கலந்து கொண்டனர்; 327 பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை.


கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில் ஆயிரத்து 387 பேர் இடங்களை தேர்வு செய்தனர்; 11 பேர்இடம் வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.


மூன்று நாள் கவுன்சிலிங்கில் மொத்தம் மூன்றாயிரத்து 809 பேர் அழைக்கப்பட்டுள்ள நிலையில், 824 பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில் 16 பேர்இடம் வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.


முந்தைய ஆண்டுகளை விட பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்து கவுன்சிலிங்கிற்கு வராதவர்களின் மற்றும்இடம் வேண்டாம் என்று தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, இந்த ஆண்டும் அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் ஒற்றைச் சாளர பொறியியல் கவுன்சிலிங்கில், பல ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக இருக்கும் என தெரிகிறது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2017 www.kalvimalar.com.All rights reserved | Contact us