உயர்கல்வி, வேலை வாய்ப்பில் சந்தேகமா? | Kalvimalar - News

உயர்கல்வி, வேலை வாய்ப்பில் சந்தேகமா?பிப்ரவரி 18,2010,11:35 IST

எழுத்தின் அளவு :

சென்னை: வேலைவாய்ப்புத்துறை சார்பில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு, விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி துவங்கியது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாணவர்களுக்கும், வேலை தேடுவோருக்கும் உயர்க்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, சென்னை பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் உதவியுடன், பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்க்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதலை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, பிளஸ் 2 மாணவர்கள், தங்களின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் வகையில், சென்னை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இலவச குறுகிய கால தொலைபேசி அழைப்பு வசதியை தற்போது வழங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர் 12799 என்ற, எண்ணிற்கு தொடர்பு கொண்டு, உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.


கிண்டி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலக கூட்ட அரங்கில் இருந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில், பொறியியல், மருத்துவம், வணிகவியல், கணிதம், அறிவியல் உள்ளிட்ட படிப்புகள் மற்றும் கணினி, தொழில் படிப்புகள் தொடர்பாகவும், இந்த படிப்புகள் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் பொது வேலைவாய்ப்புகள் குறித்து, டெலிபோன் அழைப்பு மூலம், மாணவர்களும், பெற்றோர்களும் தெரிந்து கொள்ளலாம்.


இவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பல்துறை அறிஞர்கள், கல்வியாளர்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். இன்று (18ம்தேதி) துவங்கி வரும் 25ம்தேதி வரை, காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மாணவர்கள் 12799 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை அறிந்து கொள்ளலாம். பி.எஸ்.என்.எல்., ‘லேண்ட் லைன்’ மற்றும் மொபைல் போன்களில் இருந்து, இலவசமாக தொடர்பு கொண்டு பேச வசதி செய்யப்பட்டுள்ளது.


மற்ற மொபைல் மற்றும் டெலிபோன் எண்களில் இருந்து தொடர்பு கொண்டும் சந்தேகங்களை கேட்டறியலாம்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us