பள்ளி, கல்லூரிகளில் தீ பாதுகாப்பு படை அமைக்க பரிந்துரை | Kalvimalar - News

பள்ளி, கல்லூரிகளில் தீ பாதுகாப்பு படை அமைக்க பரிந்துரைஅக்டோபர் 04,2009,17:07 IST

எழுத்தின் அளவு :


ஊட்டி: “பள்ளி மற்றும் கல்லூரிகளில், ‘தீ பாதுகாப்பு படை’ உருவாக்க, அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது,” என தீயணைப்பு துறை இயக்குனர் தெரிவித்தார்.


ஊட்டியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அலுவலகத்தை, தீயணைப்புத் துறை இயக்குனர் டி.ஜி.பி., நடராஜ், நேற்று ஆய்வு செய்தார்.


அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மழைக் காலத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய, தலைமை செயலர் ஸ்ரீபதி தலைமையில் உயர் மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடும் கமாண்டோ படையினருக்கு, சிறப்பு அதிரடிப் படை மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது; ஓசூரில் சிறப்பு மீட்புப் பணி குழு அமைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் தீயணைப்புத் துறையில், 286 தீயணைப்பு நிலையங்கள் 343 வாகனங்கள் உள்ளன; மீட்புப் பணியில் ஈடுபட போதிய வீரர்கள் உள்ளனர். தமிழக அரசு தேர்வாணையம் மற்றும் சீருடைப் பணி தேர்வாணையம் மூலம், தீயணைப்புத் துறைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 158 பேருக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. உயரமான கட்டடங்களில் நேரும் விபத்துகளின் போது மீட்புப் பணியில் ஈடுபட, பிரத்யேகமாக இரண்டு வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, அனைத்து துறைகளும் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும்; மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை செயலர் அறிவுறுத்தி உள்ளார்.


பள்ளி மற்றும் கல்லூரிகளில், ‘தீ பாதுகாப்பு படை’ உருவாக்க அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது; ஒப்புதல் கிடைத்தவுடன் உருவாக்கப்படும். இந்தியாவில் முதன்முறையாக தமிழக தீயணைப்புத் துறையில், ‘சார்’ எனப்படும் மோப்ப நாய் பிரிவு உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு நடராஜ் கூறினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us