சுதந்திர இந்தியாவை காப்பதில் இளைஞர்களின் பங்கு | Kalvimalar - News

சுதந்திர இந்தியாவை காப்பதில் இளைஞர்களின் பங்குஆகஸ்ட் 14,2011,11:07 IST

எழுத்தின் அளவு :

சுதந்திர இந்தியாவைக் காப்பதில் முக்கியப் பங்கு இளைஞர்களுக்குத்தான் உள்ளது. இன்றைய இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம்.

ஏனெனில், இளைஞர்கள் எவ்வாறு அமைகிறார்களோ அந்த வகையில்தான் இந்தியா செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது.

சுபாஷ் சந்திர போசும், கொடிகாத்த குமரனும், வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும், அடிமைபட்டுக் கிடந்த இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றிய தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த இளைஞர்களாவர்.

இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதே அன்றி, அது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குள், வெளிநாட்டு மோகம் என்ற புற்றுநோய் இந்தியாவை அரிக்கத் துவங்கிவிட்டது. நமது இளைஞர்கள் அண்டை நாட்டின் கலாச்சாரத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும் அடிமையாகிவிட்டனர்.

நமது இளைஞர் சமுதாயம் கல்வி முதல் காதல் வரை எல்லாமே அண்டை நாட்டைப் பின்பற்றி வருகிறது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற பாடலை இளைஞர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கலாச்சாரப் பெருமை மிக்க இந்தியா தற்போது கலாச்சர சீரழிவுக்கு பேர் போன இந்தியாவாக மாறி வருகிறது.

அண்டை நாட்டு மக்களோ, தற்போது இந்தியாவை பின்பற்றி ஒருவனுக்கு ஒருத்தி, கூட்டுக் குடும்ப முறைகளில் மகிழ்ச்சி கண்டு வருகின்றனர்.

இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, வேலை செய்வதோ வெளிநாட்டில். இந்தியா தந்த கல்வியை இந்திய மக்களுக்காக பயன்படுத்த இளைஞர்கள் விரும்புவதில்லை.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பழமையான மருத்துவ முறைகளுக்கு தற்போது பல்வேறு அண்டை நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாத இளைய சமுதாயம், செல்பேசி அரட்டையிலும், இரவு நேர டிஸ்கொத்தேக்களிலும் நேரத்தை செலவிடுகிறது.

இவை எல்லாவற்றையும் மாற்றி, நம் நாட்டில் சுதந்திரக் காற்றை வீச வைக்க இன்னொரு காந்தியோ, நேருவோ வரப்போவதில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்களும்தான் ஒவ்வொரு காந்தியும், நேருவும். நம் நாடு, நம் மக்கள் என்ற உணர்வுடன், இப்போதே உறுதி செய்யுங்கள். நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்போம் என்று.

தொலைநோக்குப் பார்வை அவசியம்

படித்து முடித்து வேலைக்குப் போய் கை நிறைய அல்லது பர்ஸ் நிறைய சம்பாதித்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மை அல்லாமல், பிறந்ததே சாதிப்பதற்குத்தான் என்று இலட்சியத்துடன் வாழும் இளைஞர் சமுதாயமே இந்தியாவிற்கு வேண்டும்.

இளைய சமுதாயமே கனவு காணுங்கள் என்று கூறுகிறார் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஒவ்வொருவரும் காணும் கனவு நிச்சயம் நினைவாகும். ஆனால் அதற்கு நாம் தான் உழைக்க வேண்டும்.

பள்ளிப் படிப்பின் போதே ஒரு லட்சியத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். லட்சியப் பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடை செய்யக் கூடும். ஆனால், தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம், வருமானத்தை பாதிக்கலாம், உறவைக் கூட பாதிக்கலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.

லட்சியப் பாதையை நோக்கி சீரான வேகத்தில் நாம் பயணிப்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரே வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்காமல், நாம் செல்லும் பாதையில் எல்லாம் பாதைகளை ஏற்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும்.

வனத்தை அளப்போம், நிலவை தாண்டுவோம் என்று எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நம் இளைஞர்கள் கற்பனை செய்தனர். அந்த கற்பனைதான் இன்று நிஜங்களாகிக் கொண்டிருக்கிறது.

எனவே கனவு காண்பதாலோ, கற்பனைகளோ எதற்கும் பயன்படாது என நினைக்காமல், கனவுகளையும், கற்பனைகளையும் நிஜங்களாக்கும் வழி என்ன என்று சிந்தியுங்கள். நீங்கள் போகும் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால், தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

இளைஞர்களே வாழ்க்கை சுமூகமாக சென்றால் போதும் என்று எண்ணாமல், சாதனைகளாகச் செல்ல வேண்டும் என்று எண்ணுங்கள். சுதந்திர இந்தியாவின் தூண்களே இளைஞர்கள்தான் என்ற தலைவர்களின் கருத்தை நிஜமாக்குங்கள்.


வாசகர் கருத்து

we love india
by muthuramalingam,Oman    16-ஆக-2011 00:02:59 IST
ஊழல் அரசியல்வாதிகள் இருக்கும்வரை இந்தியாவின் நிலை ICU வில் இருக்கும் நோயாளிதான். கவலைக்கிடம்.
by murugan,France    15-ஆக-2011 16:25:26 IST
ராஜீவ் காந்தியே ஒரு ஊழல் பெருச்சாளி!! அவரின் காமலீலைக்கு இந்தியர்கள் பலிகடா? இவ்வளவு பெரிய தேசத்தை ஒரு அந்நிய நாட்டுப் பெண் கட்டுப்படுத்துவதா?
by selva,India    15-ஆக-2011 09:00:40 IST
65 ஆம் ஆண்டு சுதந்திர தினம் வெட்கம், இன்னும் நாட்டில் ஊழலும், லஞ்சமும், பட்டினி சாவும், ஒழிய வில்லை, தனிமனித ஒழுக்கம் யாருக்கும் இல்லை, ஏழை மேலும் ஏழையாகிறான், பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான், பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் இல்லை, ஜாதிகள் ஒழிய வில்லை, சுத்தமான சூழ்நிலை இல்லை, சுகாதாரமான உணவு இல்லை, பிட்சைகரனும் குறைய வில்லை, எதை சாதித்துவிட்டாய் சுதந்திர தினம் கொண்டாட வெட்கம் இல்லை, இந்தியன் என்று சொல்கிறாய், அப்படி என்றல் என்ன? அண்டைவிட்டுகரநிடமும் பகை, அண்டை மாநிலத்திலும் பகை, அண்டை நாட்டு காரனிடமும் பகை, வெட்கம் இல்லை இந்தியன் என்று சொல்ல, வெளிநாடுகளில் சென்று பாரடா சின்ன சின்ன தீவுகளில் வசிக்கும் மக்கள் எல்லாம் ஒழுகதுடனும், நட்புடனும், சுத்தமான சூழ்நிலைகளில் வாழ்கின்றன, பாரத பூமி பரந்த தேசம் பல இனம், பல மொழி, பல சமயம், பல கலாச்சாரம், சுத்தமான சூழ்நிலை, சுகாதாரமான வாழ்கை எல்லாத்தையும் துளைத்துவிட்டு நான் இந்தியன் என்று சொல்கிறாய் வெட்கம் இல்லை? சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்று நினைகத்தே, அது இன்னும் கிடைக்கவில்லை, இந்தியாவின் வளங்களை சீனா அரசு நேரடியாக எடுத்துகொள்கிறது, அதை தட்டி கேட்க இன்னும் ஒரு இந்தியன் வரவில்லை? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு அனால் நாட்டை 60 ஆண்டுகளாக காந்தி குடும்பம் மட்டுமே ஆள்கிறது, அதிலும் வெட்கம் அயல் நாட்டு பெண் 110 கோடி இந்திய மக்களை ஆள்வது, அவளுக்கு அன்னை என்று பட்டம் சூட்டி மகிழ்வது வெட்கம் இல்லை? சுதந்திரத்தை அடுத்த நாட்டிடம் அடமானம் வைத்து விட்டு சுதந்திரம் தின கொண்டாட்டம் வேறு ...வெட்கம் வெட்கம் ... இந்தியாவில் காங்கிரேசும் , காந்தி குடும்பமும் ஒழிந்தால் தான் எல்லாருக்கும் சுதந்திரம், வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
by மதுரைவீரன்,India    14-ஆக-2011 23:34:49 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us