எளிய அறிவியல் சோதனை வழிமுறைகள் பயிற்சி | Kalvimalar - News

எளிய அறிவியல் சோதனை வழிமுறைகள் பயிற்சி-31-12-2011

எழுத்தின் அளவு :

திருநெல்வேலி: எளிய அறிவியல் சோதனைகள் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அனைத்து ஆசிரிய பயிற்றுனர்களுக்கு பயிற்சி நடந்தது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும் எளிய அறிவியல் சோதனைகள் செய்வதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி அளிப்பதற்காக அனைத்து ஆசிரிய பயிற்றுனர்களுக்கும் பாளை பிஷப் சார்ஜென்ட் ஆசிரிய பயிற்சி நிறுவனத்தில் 2 நாட்கள் நடந்தது.அறிவியல் கருத்துக்களை எளிய கதைகள் மூலம் விளக்கும் புத்தகங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தயார் செய்யப்பட்டு அறிவியல் ஆனந்தம் என்ற தலைப்பில் புத்தக பூங்கொத்து வரிசையில் கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாவட்ட அளவில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி முகாம் பாளை பிஷப் சார்ஜென்ட் ஆசிரிய பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பகவதி துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் 21 மையங்களில் வரும் 3ம் தேதி மற்றும் 4ம் தேதி, 5ம் தேதி மற்றும் 6ம் தேதி, 9ம் தேதி மற்றும் 10ம் தேதி, 11ம் தேதி மற்றும் 12ம் தேதி என 4 கட்டங்களாகவும், 7ம் தேதி குறு வள மைய அளவில் 192 மையங்களிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.Designed and Hosted by Dinamalar|Contact us